சீனாவை பின்தள்ளி இந்தியாவில் 67,385 குழந்தைகள்

ChinaIndia

Unicef வெளியிட்ட தவுகளின்படி 2020 ஆம் ஆண்டு புதுவருட தினத்தன்று 67,385 குழந்தைகளை பெற்ற இந்தியா முதலாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 46,299 குழந்தைகளை பெற்ற சீனா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது.
.
புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி உலகம் எங்கும் சுமார் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்படி சுமார் 17% குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன.
.
மூன்றாம் இடத்தில் உள்ள நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், 4 ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தானில் 16,787 குழந்தைகளும், 5 ஆம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் 13,020 குழந்தைகளும், 6 ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 10,452 குழந்தைகளும், 7 ஆம் இடத்தில உள்ள Congo நாட்டில் 10,247 குழந்தைகளும், 8 ஆம் இடத்தில் உள்ள எதியோப்பியாவில் 8,493 குழந்தைகளும் பிறந்து உள்ளன.
.
2027 ஆம் ஆண்டு அளவில் இந்திய சனத்தொகை சீனாவிலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ளது. தற்போது சீனாவின் சனத்தொகை 1.43 பில்லியன் ஆகவும், இந்தியாவின் சனத்தொகை 1.37 பில்லியன் ஆகவும் உள்ளன.
.