சீனா ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றிய பிரித்தானிய முகவர்

சீனாவின் Chongqing நகரில் உள்ள பிரித்தானிய முகவர் நிலையத்தில் கடமையாற்றும் Stephen Ellison என்ற 61 வயது முகவர் (consul-general) ஆறு ஒன்றின் வழியே நடந்து சென்றுள்ளார். அப்போது 24 வயது சீன பெண் ஒருவர் அந்த அவற்றுள் தடக்கி விழுந்துள்ளார். சம்பவத்தை அறிந்த முகவர் ஆற்றுள் குதித்து ஆபத்தில் இருந்த பெண்ணை கரைக்கு மீட்டுள்ளார்.

விழுந்த பெண் சில நிமிடங்கள் அசைவு இன்றி, முகத்தை நீருள் அமிழ்த்தியபடியே மிதந்தார். அந்த வழியே சென்ற பலர் வீடியோக்கள் பலவற்றை எடுத்து இணையங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிரித்தானிய முகவர் ஒரு triathlons பயிற்சி கொண்டவர். Triathlons பொதுவாக நீச்சல், துவிச்சக்கர ஓட்டம், நீண்டதூர ஓட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாக உள்ளடக்கும்.

காப்பாற்றப்பட்ட பெண் பின்னர் தன்னை விருந்துக்கு அழைத்து உள்ளதாக முகவர் கூறியுள்ளார். சீன இணையங்களில் முகவர் ஒரு திடீர் ‘hero’ ஆகியுள்ளார்.