சீனா இலங்கைக்கு மேலும் $1 பில்லியன் கடன்

SriLankaChina

இலங்கைக்கு மேலும் $1 பில்லியன் டாலர் கடன் வழங்க சீனா முன்வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளி கூறியுள்ளது. இந்த 8 வருட கடனுக்கு முதல் 3 வருடங்களுக்கு வட்டி இல்லை என்றாலும், 3 வருடங்களின் பின் 5.25% வட்டி அறவிடப்படும்.
.
சீனாவின் China Development Bank இந்த கடனை வழங்குகிறது. அதேவேளை இன்னோர் $250 மில்லியன் கடனை சீனாவின் முதலீட்டார்களிடம் இருந்து Panda Bond மூலம் பெறவும் இலங்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
.
ஏற்கனவே இலங்கை சீனாவுடன் இருந்து $5.5 பில்லியனை கடனாக பெற்றுள்ளது. தற்போது இலங்கை மற்றைய நாடுகளிடம் இருந்து பெற்றுள்ள கடன்களின் மொத்த தொகை சுமார் $52 பில்லியன்.
.

சிலவேளைகளில் இலங்கை கடன்களுக்கான வட்டிகளை செலுத்த மேலும் கடன் பெறுவது உண்டு.
.