சீனா, நியூசிலாந்து இடையே அரசியல் மோதல்

NewZealand

சீனாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையே அண்மைக்காலமாக அரசியல் மோதல்கள் நிலவி வருகின்றன. இம்மோதல்களுக்கு அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான கடும்போக்கே அடிப்படை காரணமாக அமைகிறது.
.
சீனா நிறுவனமான Huawei யின் 5G தொலைத்தொடர்பு தொழிநுட்பம் உலகம் எங்கும் பரவுவதை அமெரிக்கா அறவே விரும்பவில்லை. தனக்கு நெருக்கமான அனைத்து நாடுகளையும் Huawei யின் 5G தொழிநுட்பத்தை கொள்வனவு செய்யவேண்டாம் என்று கேட்டு வருகிறது அமெரிக்கா.
.
அமெரிக்காவின் விருப்பத்துக்கு இணங்க நியூசிலாந்து Huawei யின் 5G தொழில்நுட்பத்தை நியூசிலாந்தில் தடை செய்துவிட்டது.
.
இதனால் விசனம் கொண்ட சீனா, நியூசிலாந்தில் இடம்பெறவிருந்த Year of Chinese Tourism நிகழ்வில் இருந்து விலகி கொண்டது. நியூசிலாந்து வரும் சீன உல்லாச பயணிகளின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காக்க முனைகிறது நியூசிலாந்து. தற்போது இதை இன்னோர் தினத்தில் நடாத்த முனைகிறது நியூசிலாந்து.
.
அத்துடன் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை செய்யவும் முனைந்து வருகிறார். அதையும் தட்டிக்கழித்து வருகிறது சீனா.
.
கடந்த கிழமை இறுதியில் சீனா நோக்கி சென்ற Air New Zealand பயணிகள் விமானம் ஒன்று சீனாவுள் புக அனுமதி கிடையாததால் நடுவானில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. Air New Zealand தாய்வானை ஒரு தனி நாடு என்ற வகையில் தனது விமானசேவை விளம்பரங்களில் குறிப்பிடுவதே சீனாவின் விசனத்துக்கு காரணம். தாய்வான் சீனாவின் ஒரு அங்கம் என்கிறது சீனா.
.