சீனா மீது ரம்ப் புதிய $60 பில்லியன் இறக்குமதி வரிகள்

Trump

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு ரம்ப் இன்று வியாழன் புதிதாக $60 பில்லியன் பெறுமதியான மேலதிக வரிகளை நடைமுறை செய்துள்ளார். இந்த புதிய வரிகளுக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 1,600 பொருட்கள் உள்ளாகும். அத்துடன் சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதும் தடை செய்யப்படும்.
.
புதிய வரிக்கு உள்ளாகும் பொருட்களின் விபரம் வரும் 15 நாட்களுள் வெளியிடப்படும். அதை தொடர்ந்து 30 நாட்களுக்கு புதிய வரிகள் தொடர்பான கருத்துக்கள் அறியப்படும். இன்றில் இருந்து குறைந்தது 60 நாட்களின் பின்னரேயே புதிய வரிகள் நடைமுறை செய்யப்படும்.
.
உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மோதலுக்கு உள்ளாவது பங்கு சந்தைகளை பயமுறுத்தி உள்ளது. இன்று வியாழன் அமெரிக்காவின் DOW பங்கு சந்தை 724 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது (2.93%). NYSE, NASDAQ ஆகியன முறையே 306, 178 புள்ளிகளால் வீழ்ந்துள்ளன.
.
சீனாவுக்கு விமானங்களை விற்பனை செய்யும் Boeing என்ற அமெரிக்க நிறுவன பங்கு 5.19% ஆல் வீழ்ந்துள்ளது.
.
சீனா இதுவரை தனது நகர்வுகள் தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை.
.