சீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு

India

இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சீன எல்லையோரம் தொலைந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு Mechuka என்ற விமான தளத்தில் தரையிறக்கவிருந்த AN-32 வகை விமானமே இவ்வாறு தொலைந்துள்ளது.
.
அருணாச்சல் பிரதேசத்தில், சீன எல்லையில் இருந்து சுமார் 30 km தூரத்தில், இந்த இறங்கு தளம் உள்ளது. தொலைந்த இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
.
இந்த விமானத்தில் 13 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
.
மலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த இப்பகுதியில் காலநிலை திடீரென மாறுவது சாதாரணம். இங்கு தரை இறங்குவது கடினமான செயல்பாடு.
.
USSR காலத்து AN-32 வகை விமானம் இந்திய விமானப்படையில் முக்கிய பங்கை கொண்டிருந்தது.

.