சீன ஜனாதிபதியுடன் சந்திப்பேன் என்கிறார் ரம்ப்

US_China

தான் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்குடன் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ரம்ப்  இன்று செவ்வாய் கூறி உள்ளார். ரம்ப்  தனது கூற்றில் தான் சீயுடன் தொலைபேசியில் கதைத்ததாகவும், தாம் வரும் G20 அமர்வின் முன் நேரடியாக உரையாடவுள்ளதாகவும் கூறி உள்ளார்.
.
இவர்கள் உரையாடல் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நிலவிவரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாதுவிடின் தொடரும் வர்த்தக போர் மேலும் உக்கிரம் அடையும்.
.
G20 அமர்வு அடுத்த கிழமை, ஜூன் 28-29, ஜப்பானில் இடம்பெறவுள்ளது.
.
இந்த செய்தியால் அமெரிக்காவின் DOW பங்குச்சந்தை சுமார் 350 புள்ளிகளால் இன்று செவ்வாய் உயர்ந்து உள்ளது.

.