சீன திட்டத்துக்கு இலங்கையை அழைக்கிறது பாகிஸ்தான்

சீன திட்டத்துக்கு இலங்கையை அழைக்கிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் சீனா செய்துவரும் China-Pakistan Economic Corridor (CPEC) திட்டத்தில் இலங்கையையும் இணைய பாகிஸ்தான் அழைத்து உள்ளது. அந்த அழைப்பை இலங்கை சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ளார். இந்த அழைப்பு இந்தியாவுக்கு கவலையை அளித்துள்ளது. அனால் இந்தியா பகிரங்கமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.

அரபு கடலோரம் பாகிஸ்தானில் அமைக்கப்படும் பெரிய Gwadar துறைமுகம், அந்த துறைமுகத்தை சீனாவின் Kashgar நகருடன் இணைக்க அமைக்கப்படும் Gwadar-Lahore-Islamabad-Kashgar ரயில் பாதை இரண்டும் CPEC திட்டத்தின் பிரதான பாகங்கள். இந்த ரயில் பாதை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுள் உள்ள காஸ்மீர் ஊடே செல்கிறது. இப்பகுதியை இந்தியா தனது அங்கம் என்கிறது.

அத்துடன் தற்போது கொழும்பு துறைமுகம் கையாளும் கொள்கலங்களுள் 70% இந்தியா செல்பவை அல்லது இந்தியாவில் இருந்து வருபவை. இலங்கை பாகிஸ்தானின் Gwadar துறைமுகத்தையும் பயன்படுத்த ஆரம்பித்தால் அது இந்திய கப்பல் துறைக்கு பாதகமாக அமையலாம்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் சுமார் $4.6 பில்லியன். இந்தியாவே இலங்கையின் முதலாவது வர்த்தக கூட்டு நாடு. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் சுமார் $3.6 பில்லியன். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆண்டு வர்த்தகம் சுமார் $400 மில்லியன் மட்டுமே.