சீன பங்குச்சந்தைக்கு வயது 30, அமெரிக்க சந்தைக்கு 228

சீன பங்குச்சந்தைக்கு வயது 30, அமெரிக்க சந்தைக்கு 228

1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் திகதி சீனாவின் ஷாங்ஹாய் பங்குச்சந்தை (Shanghai Stock Exchange) ஆரம்பிக்கட்டு இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட் நாட்டில் தோன்றிய இந்த முதலாளித்துவ செயற்பாடு வேகமாக வளர்ந்து இன்று உலகின் இரண்டாவது பெரிய பங்குச்சந்தையாக உள்ளது.

ஷாங்ஹாய் பங்குச்சந்தை மூலம் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் தொகை US$11 டிரில்லியன் ($11,000 பில்லியன்) என்று கூறப்படுகிறது. கம்யூனிஸ்ட்கள் உள்ளே மறைந்து இருந்த முதலாளித்துவத்தின் வலிமையை ஷாங்ஹாய் பங்குச்சந்தை காட்டியுள்ளது.

மொத்தம் 8 நிறுவனங்களின் பங்குகளை சந்தைப்படுத்துவதன் மூலம் ஆரம்பித்த ஷாங்ஹாய் பங்குச்சந்தையில் தற்போது 1,784 நிறுவனங்கள் தமது பங்குகளை சந்தைப்படுத்துகின்றன. சீனாவின் தெற்கே Shenzhen நகரில் உள்ள Shenzhen Stick Exchange மொத்தம் 2,341 நிறுவனங்களின் பங்குகளை சந்தைப்படுத்துகிறது.

இந்த பங்குச்சந்தைகள் மூலம் சாதாரண சீனர் பெரிய நிறுவனங்களில் தம்மிடம் உள்ள சேமிப்புகளுக்கு சிறிதளவு பங்குகளை கொள்வனவு செய்ய முடிந்தது.

உலகின் முதல் பெரிய பங்குச்சந்தையான அமெரிக்க பங்குச்சந்தை (Wall Street) சுமார் 228 ஆண்டுகளுக்கு முன், 1792 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உலகின் முதல் 20 பெரிய நிறுவனங்களில் 3 சீனாவில் உள்ளது. உலகின் 30 அதிஉயர் செல்வந்தர்களில் 4 பேர் சீனர்.