சுற்றுலா: அழகிய சிகிரியா (இலங்கை)

Sigiriya1

SigiriyaMap

இலங்கையின் முதன்மை சுற்றுலா இடங்களில் ஒன்று சிகிரியா. இதை Laion Rock என ஆங்கிலத்தில் அழைப்பர். இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்ட பகுதியில் (Matale District) இது உள்ளது. உலக Heritage Siteகளில் ஒன்றான இதில் உள்ள ஓவியங்கள் உலக பிரசித்தம். இந்த ஓவியங்கள் இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள (Ajanta Caves) ஓவியங்களை ஒத்தது. இதை காசியப்ப அரசன் கி.பி. 477-495 ஆண்டு வரையான காலங்களில் நிர்மாணம் செய்ததாக கூறப்படுகிறது. காசியப்பனின் மறைவின் பின் இது புத்த துறவிகள் தங்குமிடமாக மாறியது.

தனது தந்தை தாதுசேனாவை (Dhatusena) உயிருடன் சுவரில் புதைத்து கொலை செய்தபின் ஆட்சியை கைப்பற்றிய காசியப்பன் அதுவரை தலைநகராக இருந்த அனுராதபுரத்தை கைவிட்டு சிகிரியாவை தலைநகர் ஆக்கினார். 495 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து உதவிகளுடன் மீண்டு வந்து காசியப்பனை வென்ற காசியப்பனின் சகோதரன் மொகலாலன் மீண்டும் அனுராதபுரத்தை தலைநகர் ஆக்கினார். இதன்பின் 16ஆம் 17ஆம் நூற்றாண்டுகளில் இது கண்டி இராச்சியத்தின் பாகமானது.

சுமார் 470 மீட்டர் உயரமான இந்த சிங்க வடிவிலான பாறையின் உச்சத்தில் ஒரு அரண்மைக்கு தேவையான எல்லா வசதிகளும் உண்டு. சுற்றாடல் பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை உயரமான இது UNESCOவின் World Herritage Centre தராதரம் பெற்ற ஒரு சின்னமாகும்.

சுமார் 1.5 hectares (15,000 square meters) பரப்பளவு கொண்ட இந்த பாறையின் உச்சத்தில் குடைந்தெடுத்து உருவாக்கப்பட்ட தடாகம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும் 21 மீட்டர் அகலமும் கொண்டது.

குறிப்பு:
இங்கு செல்வதற்கு இலகுவான பிரதான நகரங்களில் இருந்து பொது போக்குவரத்து சேவைகள் இல்லை. அதனால் ஒழுங்க செய்யப்பட வாகனங்களிலேயே செல்வது அவசியம். வெளிநாட்டவருக்கான நுழைவு கட்டணமும் இலங்கையரைவிட முகவும் அதிகம். தேவையான குடி தண்ணீர் எடுத்து செல்வது நன்று.Guide சேவையை பெறவேண்டிய அவசிம் இல்லை, சுயமாக ஏறி பார்வையிடலாம்.