சூறாவளி Joaquinனால் பேரழிவு, கப்பலை காணவில்லை

ElFaro

சூறாவளி (Hurricane) Joaquin அமெரிக்காவின் கிழக்கு பகுதிக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூறாவளியின் மையம் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் தரை தட்டலாம் என்று எதிர்பார்த்து இருந்தாலும் அதன் மையம் கடல் வழியே செல்கிறது. ஆனாலும் அதன் தாக்கம் அமெரிக்காவின் கிழக்கே பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக South Carolina மாநிலத்தில் அதிக சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகள், வர்த்தகங்கள், சாலைகள் என்பன நீருள் மூழ்கியுள்ளன. இந்த மாநிலத்தின் ஊடாக செல்லும் I-95 பெரும்சாலையின் 100 km வரையான பகுதி இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த மாநில ஆளுநர் தாம் 1000 வருடங்களில் காணாத வெள்ளத்தை கண்டுள்ளதாக கூறியுள்ளார்.
.
இந்த சூறாவளியின் மையத்துள் El Faro என்ற 735 அடி நீள கொள்கலன் தாங்கி கப்பல் பஹாமாஸ் (Bahamas) கடல் பகுதில் காணாமல் போயிருந்தது. இதனுடன் 33 பணியாளரும் காணாமல் போயிருந்தனர். இதில் 28 பேர் அமெரிக்கர், மற்றையோர் போலாந்து நாட்டவர். இன்று அமெரிக்க கரையோர பாதுகாப்பு (Coast Guard) படையினர் life jacket, oil  உட்பட இந்த கப்பலுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய பொருட்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.இந்த கப்பல் புளோரிடாவில் (Florida) இருந்து Puerto Rico செல்கையிலேயே சூறாவளியில் அகப்பட்டுக்கொண்டது. இந்த கப்பலில் இருந்து அபாயக்குரல் வியாழன் காலை 7:30 அளவில் கிடைத்திருந்தது.
.

பஹாமாஸில் இந்த சூறாவளி இரண்டு நாட்களாக 210 km வரையிலான காற்று வீச்சை கொண்டிருந்தது. தற்போது இதன் காற்று வீச்சு சுமார் 160 km  ஆக
.