செவ்வாய் அமெரிக்காவில் Midterm தேர்தல்

USFlag

வரும் செய்வாய்க்கிழமை, நவம்பர் 6 ஆம் திகதி, அமெரிக்காவின் midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ரம்பின் கட்சி சில தோல்விகளை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.
அமெரிக்காவில் நாலு வருடங்களுக்கு ஒரு தடவை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவது போல், நாலு வருடங்களுக்கு ஒரு தடவை, முன்னைய ஜனாதிபதி தேர்தலில் இருந்து இரண்டு வருடங்களின் பின், midterm என்ற இடைக்கால தேர்தல் இடம்பெறும். இந்த இடைக்கால தேர்தலில் அனைத்து House of Representatives ஆசனங்களும், 36 Senate ஆசனங்களுக்கும், மாநில அளவில் பல Governor ஆசனங்களுக்கும், வேறு சில பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறும்.
.
Midterm தேர்தல் பொதுவாக ஜனாதிபதியின் கொள்கைகள் மீதான கணிப்பு தேர்தலாகவே கொள்ளப்படும்.
.
தற்போது ரம்பின் Republican கட்சி House (235/435), Senate (51/100) ஆகிய இரண்டு அவைககளிலும் பெரும்பான்மையாக இருந்தாலும், செவ்வாய் தேர்தலின் பின் House ரம்பின் தரப்பில் இருந்து நழுவி Democrats கைகளுக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கைமாறின், ரம்ப்  தன்னிசைப்படி பல நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும்.
.
Senate யாரின் கைக்கு போகும் என்பதை தற்போதும் திடமாக கூறமுடியாது உள்ளது.
.