சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

சைப்ரஸ் ‘golden passport’ வழங்கலை நிறுத்தியது

அண்மையில் Al Jazeera செய்தி நிறுவனத்தின் ஆய்வு கட்டுரை ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் கொண்ட சைப்ரஸ் (Cyprus) அந்நாட்டில் முதலீடு செய்யும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் செல்வந்தர்களுக்கு கடவுச்சீட்டு (passport) வழங்குவதை பகிரங்கப்படுத்தி இருந்தது. இந்த விவகாரங்களில் ஊழலும் இடம்பெற்று இருந்தன.

அந்த ஆய்வு கட்டுரை காரணமாக தற்போது சைப்ரஸ் மேற்படி கடவுச்சீட்டு வழங்கலை இடைநிறுத்தி உள்ளது. நவம்பர் மாத 1 ஆம் திகதி முதல் இடைநிறுத்தம் நடைமுறைக்கு வரும்.

மேற்படி முறைமூலம் சுமார் 4,000 பேர் சைப்ரஸ் கடவுச்சீட்டு பெற்றுள்ளனர். அதற்கு அவர்கள் மொத்தமாக சுமார் $8.25 பில்லியன் செலவு செய்துள்ளார்.

அத்துடன் 7 கடவுச்சீட்டுகள் மீண்டும் பறிக்கப்படவுள்ளன. அதில் ஒன்று மலேசியாவின் 1MDB ஊழலுடன் தொடர்பு கொண்ட சிங்கப்பூர் வாசியான Jho Low வுக்கு வழங்கப்பட்டது. தலைமறைவாகி உள்ள இவர் அமெரிக்காவிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.