ஜப்பான் தயாரித்த AstraZeneca குப்பிகளும் வந்தன

ஜப்பான் தயாரித்த AstraZeneca குப்பிகளும் வந்தன

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட AstraZeneca வகை கரோனா தடுப்பு மருந்து குப்பிகள் 700,000 இன்று சனிக்கிழமை கொழும்பை அடைந்துள்ளன. மேலும் 800,000 குப்பிகளை ஜப்பான் பின்னர் அனுப்பும்.

ஐ.நா. தலைமையில் வறிய நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்க COVAX திட்டம் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த திட்டப்படி ஜப்பான் 15 நாடுகளுக்கு 11 மில்லியன் AstraZeneca மருந்துகளை வழங்க இணங்கி இருந்தது.

அந்த 15 நாடுகளில் ஒருநாடு இலங்கை. இலங்கைக்கு ஜப்பான் மொத்தம் 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பு மருந்துகளை வழங்கும். கம்போடியா, ஈரான், பங்களாதேசம் ஆகிய நாடுகளும் ஜப்பானின் மருந்துகளை பெற்றுள்ளன.

இந்தியா தயாரித்த AstraZeneca தடுப்பு மருந்துகளையும் இலங்கை பெற்று இருந்தது. ஆனால் இந்தியாவில் கரோனா வேகமாக பரவ அங்கிருந்தான AstraZeneca தடுப்பு மருந்தின் வரவு தடைப்பட்டது. அதனால் ஜப்பானின் உதவி நாடப்பட்டது. ஏற்கனவே இரண்டாம் AstraZeneca ஊசி போடப்பட இருந்தவர்களுக்கும் ஜப்பானின் மருந்து பயன்படும்.

சீனா மொத்தம் 10 மில்லியன் சீன தடுப்பு மருந்துகளையும் இலங்கைக்கு வழங்குகிறது.