ஜெயலலிதா மருத்துவத்தில், பன்னீர்செல்வம் கடமையில்

Jaya

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் சுகவீனம் காரணமாக Apollo வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் (22-10-2016) இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக உறுதியான செய்திகள் வெளியிடப்படவில்லை. அதேவேளை ஒரு பிரித்தானிய வைத்தியர் ஜெயலலிதாவை கண்காணிக்க தமிழ்நாடு சென்றுள்ளார்.
.
இன்று செவ்வாய் ஜெயலலிதாவின் கடமைகள் அவரின் நம்பிக்கைக்கு உரியவராக பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இந்த கடமைகள் கைமாற்றம் தமிழ்நாடு ஆளுநர் முன்னிலையில் இடம்பெற்று உள்ளது. ஆனாலும் ஜெயலலிதாவே தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார்.
.
ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக வதந்தி பரப்பியோர் என்று கூறி இருவர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 43 இவ்வகை குற்றங்கள் விசாரணை செய்யப்படுகின்றனவாம்.
.

தற்போது ஜெயலலிதாவுக்கு வயது 68.
.