ஜெர்மனியின் Bavarian மாநிலத்தில் உள்ள Munchberg என்ற நகரில் இன்று திங்கள் காலை இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றுக்கு குறைந்தது 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 30 பேர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளனர்.
.
.
மொத்தம் 48 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஒன்றும், Truck ஒன்றும் அங்குள்ள A9 Highwayயில் மோதிய பின் விபத்துக்குள்ளான பஸ் தீ பற்றிக்கொண்டது.
.
உள்ளூர் நேரப்படி திங்கள் காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கு பலியானோர் பெரும்பாலும் உல்லாச பயணம் சென்ற வயோதிபரே என்று கூறப்படுகிறது.
.
.
பல பயணிகள் அடையாளம் காணப்பட முடியாத அளவுக்கு கருகி போயுள்ளனர் என்று மீட்பாளர்கள் கூறியுள்ளனர்.
.
Autobahn என்று அழைக்கப்படும் இந்த highwayகளில்,குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு அப்பால், பொதுவாக வேக கட்டுப்பாடு இல்லை. ஆனாலும் இந்த தெருக்களுக்கான அறிவுறுத்தப்பட்ட அதிகூடிய வேகம் 130 km/h ஆகும்.
.