ஜேர்மனியுடன் மோதும் டிரம்ப்

Trump

டிரம்ப் இதுவரை தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகளில் மிகவும் வித்தியாசமானவர், விசித்திரமானவர். அளந்து பேசுவது, ஆய்ந்து பேசுவது, நிதானமாக பேசுவது எல்லாம் இவர் பழக்கம் அல்ல. அதையே அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்பும் செய்யகிறார். டிரம்பின் வசைபாடலில் தற்போது சிக்கியுள்ளது ஜேர்மனி.
.
NATO அணி பயன்பாட்டில் ஓர் காலம்கடந்த அமைப்பு (obsolete) என்கிறார் டிரம்ப். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியது நல்ல விடயம் (great) என்கிறார் டிரம்ப். ஜேர்மனியின் தலைவர் Merkelலின் அகதிகள் ஆதரவு கொள்கைகள் பாரதூரமான தவறு என்கிறார் டிரம்ப். மேலாக தான் ரஷ்யாவின் புட்டினுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
.
இவ்வாறு கூற்றுக்களை வெளியிடும் அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு செயல்படுவார் என்று தெரியாது குழம்பி உள்ளது ஜேர்மனி. டிரம்ப் இதுவரை வன்மையாக சாடிவரும் முதல் இரண்டு நாடுகள் சீனாவும், ஜேர்மனியும் ஆகும்.
.

வரும் 20ஆம் திகதி முதல் உலக அரசியல் பல்சுவை நிறைந்ததாக இருக்கப்போவது உறுதி. நாணய மாற்று வீதங்களும், பங்கு சந்தைகளும் பெரும் குழப்ப நிலைக்கும் தள்ளப்படலாம்.
.