ஜேர்மன் பிறப்பு வீதம் உலகிலேயே மிககுறைந்தது

BirthRate

BDO என்ற ஜேர்மன் நாட்டு தரவு நிறுவனமும் Hamburg Institute of Economics நிறுவனமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி உலகத்திலேயே மிக குறைந்த பிறப்பு வீதம் கொண்ட நாடாக தற்போது ஜேர்மன் உள்ளது. இதுவரை ஐரோப்பாவில் மட்டும் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டிருந்த ஜேர்மன் இப்போது உலக அளவில் மிக குறைந்த பிறப்பு வீதத்தை கொண்டுள்ளது.
.
ஜேர்மனில் பிறப்பு வீதம் 1000 க்கு 8.2 ஆக உள்ளது. அதேவேளை உலகில் அதி கூடிய பிறப்பு வீதம் கொண்ட Niger நாட்டில் அது 1000 க்கு 50 ஆக உள்ளது.
.
பிறப்பு வீதம் இந்த அளவில் இருந்தால் ஜேர்மனின் உழைக்கும் மக்கள் வீதம் 2030 ஆண்டு அளவில் 54% ஆக குறையும் என கணிப்பிடப்பட்டுள்ளது. அது பொருளாதாரம் வளர தடையாக இருக்கும். தற்போது ஜேர்மனில் இந்த கணியம் 61% ஆக உள்ளது.
.
இலங்கையில் தற்போதைய பிறப்பு வீதம் சுமார் 16% ஆக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பிறப்பு வீதம் இதைவிட அதிகம். குழந்தை பிறந்தபின் ஏற்படும் மரணம், சிறுவர்கள் மற்றும் இளவயதினர் வெளிநாடு போவதும் இந்த கணியத்தில் அடங்கா.
.

இந்தியாவில் தற்போதைய பிறப்பு வீதம் சுமார் 20% ஆகவும், சீனாவில் பிறப்பு வீதம் சுமார் 12% ஆகவும் உள்ளது.
.