டிரம்ப் பாதுகாப்பு ஆலோசகர் Flynn பதவிதுறந்தார்

Flynn

டிரம்பின் ஆட்சியில் மிக முக்கிய பங்கு கொண்டிருந்த பாதுகாப்பு ஆலோசகர், ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல், Michael Flynn ஆலோசகர் பதவியை திங்கள் இரவு இழந்துள்ளார். டிரம்ப் ஆட்சியில் வீழ்ச்சி அடையும் முதலாவது முன்னணி உறுப்பினர் இவராகும்.
.
ஒபாமா ஆட்சி காலத்தில், டிரம்ப் சட்டப்படி ஜனாதிபதியாக பதவி ஏற்கமுன், ரஷ்யா மீது சில தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஹில்லாரி கிளின்டன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் emailகளை களவாடி பகிரங்கப்படுத்தியதால் கோபம் கொண்ட ஒபாமா மேற்படி தடையை விதித்து இருந்தார்.
.
ஆனால் trump ஆதரவாளரான ஜெனரல் Flynn அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதுவருடன் தொடர்புகொண்டு தாம் ஆட்சிக்கு வந்தவுடன் மேற்படி தடைகளை விலக்கலாம் என்ற வகையில் பேசியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் ஒபாமாவின் தடைக்கு பதில் தடை எதுவும் நடைமுறைப்படுத்தாது தாமதித்தார். அவ்வாறு தாமதித்ததை டிரம்ப் விபரிகையில் அது புட்டினின் புத்திசாலித்தனம் என்றும் கூறியிருந்தார்.
.
அமெரிக்காவின் ஒட்டுகேட்கும் அமைப்பான NSA Flynnனின் இந்த உரையாடலை பதிவு செய்துள்ளது. அத்துடன் NSA பணிபுரியும் டிரம்பை வெறுப்பவர் ஒருவர் இந்த தகவலை பத்திரிகைகளுக்கு கூறியுள்ளார்.
.
இந்த உரையாடல் சட்டத்துக்கு முரணான செயல்பாடு என்பதால் வேறுவழி இன்றி Flynn பதவியைவிட்டு விலக அழுத்தப்படார்.
.

இப்போது ரஷ்யாவின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே பலரின் கேள்விக்குறி. புட்டினுடன் நல்ல உறவை வளர்க்க டிரம்ப் விரும்பி இருந்தார். Fylnn விவகாரம் இப்போ அதற்கு இடராக உள்ளது.
.