டிரம்ப் பெயரில் விசா விற்கும் குஷ்னர் குடும்பம்

Kushner

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் முதல் மகளின் கணவன் ஜெரட் குஷ்னர் (Jared Kushner). டிரம்ப் போலவே குஷ்னர் குடும்பமும் கட்டுமான வர்த்தகத்தில் (development) ஈடுபட்டு உள்ளவர்கள். ஜெரட் குஷ்னர் அண்மையில் டிரம்ப் அரசில் விசேட ஆலோசகராக இணைந்தபின், தனது குடும்ப கட்டுமான நிறுவனத்தில் இருந்து சட்டப்படி விலகி இருந்தார். அதனால் அந்த வர்த்தகத்தை ஜெரட் குஷ்னரின் சகோதரி இயக்கி வருகிறார்.
.
அண்மையில் சீனாவின் பெய்ஜிங் (Beijing) நகரில் குஷ்னர் குடும்பம் New Jerseyயில் கட்டும் புதிய ஆடம்பர வீடுகளுக்கான பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கே, இவர்களின் வீடுகளை கொள்வனவு செய்யும் நோக்கில் இருந்தோர் முன்னிலையில், ஜெரட் குஷ்னர் தொடர்புகள் பற்றியும் கூறியுள்ளார்.
.
இவ்வாறு குறைந்தது $500,000 வழங்கி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு EB-5 என்ற விசா வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த கட்டுமானம் சுமார் 1,730 condoகளை கொண்டிருக்கும். இதே குடும்பம் தமது இன்னோர் கட்டுமானத்துக்கும் $50 மில்லியன் முதலீட்டை EB-5 விசா மூலம் பெற்றுள்ளது.
.
தாம் இவ்வாறு செய்தது தவறு என்று பின்னர் குஷ்னர் குடும்ப நிறுவனம் கூறியுள்ளது.
.
அண்மையில் டிரம்ப் இந்த விசா முறைமையை மீண்டும் புதுப்பித்து இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
.

2014 ஆம் ஆண்டில் 85%மான EB-5 விசாவை, 10,692 விசா, சீனர்கள் பெற்றிருந்தனர். இவர்கள் பின்னர் அமெரிக்க குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம்.
.