டுபாயில் தரையிறங்கிய விமானம் தீப்பற்றியது

EK521

இன்று மாலை இந்தியாவின் திருவானந்தபுரத்தில் இருந்து டுபாய் வந்த Boeing 777 வகை Emirates விமானம் (Flight EK521) தரை இறங்கையில் தீப்பற்றி பாவனைக்கு உதவாத வகையில் எரிந்து நாசமாகியுள்ளது. விமானத்தில் இருந்த 282 பயணிகளும், 18 விமான பணியாளர்களும் விமானத்தில் இருந்து வெளியேறி தப்பியுள்ளார். ஆனால் தீ அணைக்கும் படையினர் ஒருவர் பலியாகி உள்ளார்.
.
அந்த விமானத்தின் விமானி தமது விமான சக்கர செயல்பாடுகளில் (Landing gear) குழப்பம் இருந்ததாகவும் அவசர தரை இறங்களை அனுமதிக்குமாறும் கேட்டு இருந்துள்ளார். தரையில் எரிந்துள்ள விமானம் Landing gear வெளியே வராமலேயே உள்ளது.
.
டுபாய் ஒரு பெரிய விமான நிலையம் என்றாலும், அங்கு இரண்டு ஓடு பாதைகள் மட்டுமே உள்ளன. அதனால் அந்த விமான நிலையத்துக்கான விமான சேவைகள் சிலமணி நேரம் பாதிக்கப்பட்டு இருந்தது.
 .

அந்த பயணிகளில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கில் தொழில் புரியும் இந்தியர்.

.