டெல்கி வளிமாசு 44 புகைப்பிடிப்புக்கு நிகர்

India

இந்தியாவின் தலைநகர் டெல்கி மீண்டும் சுவாசத்துக்கு உதவாத வளியால் சூழப்பட்டு உள்ளது. அங்கு தற்போதை வளி PM2.5 மாசு சுட்டியில் 1,000 அளவீடடை கொண்டுள்ளது. World Health Organization கருத்துப்படி particulate matter 2.5 அல்லது PM2.5 அடிப்படையிலான வளி மாசு சுட்டி 25 க்கும் மேலாக இருப்பது மனித சுவாசத்துக்கு பாதகமானது.
.
PM2.5 அடிப்படையிலான சுட்டியின்படி ஒரு மீட்டர் கனவளவு வளியில் 25 குக்கும் அதிகமான 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான (smaller than 2.5 micrometer) விட்டத்தை கொண்ட துகள்கள் இருப்பது சுவாசத்துக்கு உகந்தது அல்ல. டெல்கியில் தற்போது ஒரு கனமீட்டரில் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட 1,000 துகள்கள் உள்ளனவாம்.
.
அமெரிக்காவின் காலிபோர்னியாவில் உள்ள Berkeley Earth என்ற விஞ்ஞான ஆய்வு குழுவின் கருத்துப்படி 950 முத்த 1,000 PM2.5 துகள்களை கொண்ட காற்றை சுவாசிப்பது நாள் ஒன்றுக்கு 44 புகைபிடித்தலுக்கு நிகரானதாம். சிலர் டெல்கியை தற்போது “gas chamber” என்றே அழைக்கின்றனர்.
.
PM2.5 துகள்கள் மிகவும் ஆபத்தானவை. அளவில் மிகவும் சிறிதாக இருப்பதால் அவை இலகுவில் சுவாசப்பை போன்ற உடலின் முக்கிய உறுப்புக்களை அடைகின்றன.
.
2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட கணிப்பு ஒன்றின்படி டெல்கியின் வளி மாசில் 20% மாசு வாகனங்களின் புகையால் ஏற்பட்டதாம்.
.
தற்போதைய வளிமாசு காரணமாக அமெரிக்காவின் United Airlines விமானசேவை Newwark-டெல்கிக்கான சேவைகளை இடைநிறுத்தம் செய்துள்ளது. டெக்கியில் உள்ள 6,000 பாடசாலைகளும் மூடப்பட்டு உள்ளன.
.