தன்நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் பணக்காரி

Isabel_dos_Santos

தன் நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் முதல் பணக்காரி ஆகியுள்ளனர் Isabel dos Santos என்று தற்போது பகிரங்கத்துக்கு வந்த ஆவணங்கள் கூறுகின்றன. அங்கோலா (Angola) நாட்டை சுமார் 38 வருடங்கள் ஆண்ட முன்னாள் சனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மூத்த மகளே Isabel. பிரித்தானியாவில் கல்வி கற்ற Isabel தற்போது கொள்ளையடித்த சொத்துக்களுடன் பிரித்தானியாவிலேயே வாழ்கிறார். இவரின் தற்போதை சொத்துக்களின் பெறுமதி சுமார் $2 பில்லியன் என்று கூறப்படுகிறது.
.
மேற்படி தகவல்களை BBC செய்தி நிறுவனத்தின் Panorama நிகழ்ச்சி வெளியிட்டு உள்ளது. Isabel தொடர்பான சுமார் 700,000 ஆவணங்களை BBC ஆராய்ந்து உள்ளது. International Consortium of Investigative Journalists (ICIJ) என்ற அமைப்பும் இந்த ஆய்வுக்கு உதவி உள்ளது.
.
தகப்பனார் சனாதிபதி ஆக இருந்தபோது Isabel அரசின் நில, எண்ணெய், வைர மற்றும் தொலைபேசி ஒப்பந்தங்களை குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து பின் அதிக விலைக்கு விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்துள்ளார்.
.
2016 ஆம் ஆண்டில் Isabel அங்கோலாவின் அரச எண்ணெய் நிறுவனமான Sonangol லின் தலைவியாக பதவி வகித்துள்ளார். அக்காலத்தில் Isabel டுபாயில் உள்ள Matter Business Solutions என்ற பொய் நிறுவனத்துக்கு தகுந்த காரணம் இன்றி $58 மில்லியன் கட்டணம் செலுத்தி உள்ளார். மேற்படி பொய் நிறுவனத்துக்கும் இவருக்கும் தொடர்பு உண்டு என்று ஆய்வுகள் கண்டுபிடித்து உள்ளன.
.
2006 ஆம் ஆண்டில் அங்கோலாவின் Sonangol எண்ணெய் நிறுவதின் அங்கம் ஒன்றை மிக குறைந்த ($70 மில்லியன்) விலைக்கு போர்த்துக்கல் நிறுவனமான Galp மூலம் Isabel உரிமை கொண்டார். அந்த கொள்வனவுக்குக்கான 15% பணத்தை மட்டுமே அவர் அப்போது செலுத்தி இருந்தார். மிகுதி பணத்தை மிக குறைந்த 11-வருட வட்டிக்கு அங்கோலாவே வழங்கி இருந்தது. Galp நிறுவனத்தின் தற்போதை பெறுமதி சுமார் $800 மில்லியன் என்று கூறப்படுகிறது.
.
2012 ஆம் ஆண்டு Isabel லின் கணவர் Sindika Dokolo அங்கோலா அரச வைர நிறுவனமான Sodiam முடன் கொள்ளை இலாப உடன்படிக்கை ஒன்றை செய்துள்ளார். கணவரும், அங்கோலா அரசும் சுவிஸ் நாட்டு De Grisogono என்ற நகை நிறுவனத்தில் 50/50 உரிமையில் முதிலீடு செய்துள்ளார். அவர்கள் 50/50 உரிமையை கொண்டிருந்தாலும் அரச நிறுவனம் $79 மில்லியன் முதலீடு செய்ய, கணவர் $4 மில்லியன் மட்டுமே முதலீடு செய்துள்ளார். அத்துடன் உடனேயே சுமார் $4.5 மில்லியனை தனது சேவைக்காக மீள பெற்றுள்ளார்.
.
விசாரணைகளின் பின் அங்கோலா அரசின் Sodima நிறுவனம் தனது முதிலீட்டு பணத்தை De Grisogono விடமே மிகையான 9% வட்டிக்கு பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கும் மேலாக De Grisogono நிறுவனத்தில் Isabel முதலாவது உரிமையை கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
.
எண்ணெய், வைரம் என்பனவற்றை கொண்டுள்ள அங்கோலாவின் 30% மக்கள் நாள் ஒன்றின் செலவுக்கு சுமார் $1.90 மட்டுமே கொண்டுள்ளனர்.
.
காலனித்துவ அந்நியர்கள் செய்த கொள்ளையடிப்புக்கும் அதிகமான கொள்ளையடிப்பை சுதந்திர நாட்டு அரசியல் கொள்ளையர்கள் செய்கிறார்கள்.
.