தாய்லாந்தில் சீன கால்வாய், அந்தமானில் இந்திய தளம்

தாய்லாந்தில் சீன கால்வாய், அந்தமானில் இந்திய தளம்

சிங்கப்பூர்/மலேசியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையே உள்ள மலாக்கா நீரினை (Malacca Strait) நீண்ட காலமாக வர்த்தகத்துக்கு முக்கிய பாதையாக இருந்து வந்துள்ளது. 1292 ஆம் ஆண்டில் இத்தாலியரான மார்கோ போலோ (Marco Polo) இவ்வழியூடே தூரக்கிழக்கு சென்று இருந்தார்.

தற்போது ஆண்டு ஒன்று சுமார் 80,000 வர்த்தக கப்பல்கள் இவ்வழியே செல்கின்ற. அதனால் இவ்வழி மிகவும் நெருக்கடி நிறைந்ததாக உள்ளது. அதனால் சீனா தாய்லாந்தை ஊடறுத்து ஒரு மாற்றுவழி அமைக்க முயக்கிறது. அவ்வாறு சீனாவின் கடுப்பாட்டுள் பிரதான கால்வாய் ஒன்று இந்து சமுத்திரத்தை தூரகிழக்குடன் இணைப்பதை இந்தியா விருப்பவில்லை.

சீனாவின் இந்த புதிய கால்வாயால் மிரண்ட இந்தியா அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள இரண்டு விமான தளங்களை இராணுவ தரத்துக்கு உயர்த்த தீர்மானித்து உள்ளது. அந்தமானில் உள்ள Shibpur தளமும், நிக்கோபாரில் உள்ள Campbell தளமுமே இவ்வாறு இராணுவ மயமாக்கப்பட உள்ளன.

அதுமட்டுமன்றி மேற்கே உள்ள இலச்ச தீவுகளில் (Lakshadweep) உள்ள இந்திய இராணுவ தளமும் தரம் உயர்த்தப்படவுள்ளது.

தாய்லாந்து கால்வாய் நியமிக்கப்படின், அது இந்துசமுத்திரத்தில் இருந்து தூரக்கிழக்குகான கடல் பாதையை சுமார் 1,200 km தூரத்தால் குறைக்கும். சீனாவின் இந்த திட்டம் இரண்டு 30 மீட்டர் ஆழமும், 180 அகலமும் கொண்ட சமாந்தர கால்வாய்களை கொண்டது. இது தாய்லாந்தை சுமார் 120 km ஊடறுக்கும். அத்துடன் இதற்கு குறைந்தது $30 செலவாகும்.

மத்தியகிழக்கின் சுயஸ் கால்வாய் 1869 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்தது. மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா கால்வாய் 1903 ஆம் ஆண்டில் சேவைக்கு வந்திருந்தது.