தாய்லாந்து இந்து ஆலயம் அருகில் குண்டு வெடிப்பு, 19 உயிர்கள் பலி

BangkokAttack

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் (Bangkok) உள்ள இந்து ஆலயம் ஒன்றின் அருகில் குண்டு ஒன்று இன்று திங்கள் வெடித்துள்ளது. இக்குண்டு வெடிப்புக்கு 19 உயிர்கள் பலியாகி உள்ளதுடன் சுமார் 120 பெயர்கள் வரை காயமடைந்து உள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை.
.
இறந்தவர்களில் 10 பெயர்கள் தாய்லாந்து நாட்டினர் எனவும், இருவர் சீனர் எனவும், ஒருவர் பிலிப்பீன் நாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனைய உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.
.
இது ஒரு இந்து ஆலயம் என்றாலும், தாய்லாந்தின் புத்த சமயத்தவர் பெருமளவில் வருகை தரும் ஆலயம் ஒன்றாகும். அத்துடன் உல்லாச பயணிகளும் பெருமளவில் இங்கு வருகை தருவதுண்டு.
.
2014 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தில் இராணுவ ஆட்சி இருந்து வருகிறது. அத்துடன் தாய்லாந்து-மலேசியா எல்லை மாநிலங்களில் வாழும் இஸ்லாமிய புரட்சியாளர்களும் அவ்வப்போது சிறு தாக்குதல்கள் செய்வதுண்டு.
.