தாய்லாந்து நோயிலே, மன்னார் ஜெர்மனியிலே

Thailand

தாய்லாந்து கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கையில், அந்நாட்டு அரசர் (King Maha Vajiralongkorn, வயது 67) ஜெர்மனியில் உள்ள மலை பகுதியில் பாதுகாப்பாக தங்கி உள்ளார். இதனால் கோபம் கொண்டுள்ளார் சில தாய்லாந்து மக்கள். தம்முடன் இல்லாத மன்னர் எதற்கு என்று அவர்கள் வினாவுகின்றனர்.
.
மன்னார் நாட்டில் இல்லாமை தொடர்பாக கருத்து கூற மறுத்த அரசு, பதிலாக மன்னரை அவதூறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரித்து உள்ளது. Puttipong Punnakanta என்ற அமைச்சர் மன்னரை அவதூறு செய்வோர் தண்டிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.
.
ஜெர்மனி-அஸ்ரியா எல்லையோரம் உள்ள Garmisch-Partenkirchen பகுதியில் உள்ள Grand Hotel Sonnenbichl லிலேயே மன்னர் தங்கி உள்ளார். அவருடன் கூடவே 20 பெண்களும், சேவகர்களும் தங்கி உள்ளனர்.
.
சிறுதொகை தாய்லாந்து மக்கள் மன்னரை கடவுள் போல் தொழுவதும் உண்டு.
.
மன்னர் நாட்டில் இல்லை என்றாலும் அவரின் கட்டளைப்படி இராணுவம் 1932 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் சனநாயக அமைக்க புரட்சி செய்தோரின் அடையாள இடங்களின் பெயர்களை நீக்கி வருகிறது. 1932 ஆம் ஆண்டு புரட்சியாளர் பெயர்களுக்கு பதிலாக மன்னரின் பெற்றாரின் பெயர்கள் இடப்பட்டு வருகின்றன.
.
Phahol Pholphayuhasena Artillery Center என்ற இராணுவ தளம் தற்போது Fort Bhumibol என்று மாற்றப்பட்டு உள்ளது. Fort Pibulsongkaram என்ற தளம் Fort Sirkit என்று மாற்றப்பட்டு உள்ளது. Pholphayuhasena, Pibulsongkaram ஆகிய இரண்டு முன்னாள் இராணுவத்தினரும் 1932 ஆம் ஆண்டில் மன்னார் ஆட்சியை விடுத்தது சனநாயக ஆட்சி அமைக்க போராடியவர்கள். பின்னர் இவர்கள் பிரதமர்களாக பதவியும் வகித்தவர்கள்.
.
தற்போது தாய்லாந்தில் மன்னார் இராணுவத்தை பாதுகாக்க, இராணுவம் மன்னரை பாதுகாக்க, ஏறக்குறைய ஒரு அரை இராணுவ ஆட்சியே பதவியில் உள்ளது.
.