தாய்வானில் ரயில் தடம்புரண்டது, 18 பேர் பலி

Taiwan

தாய்வானில் இன்று ஞாயிறு மாலை 4:50 மணியளவில் கடுகதி ரயில் ஒன்று தடம்புரண்டு உள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 18 பேர் பலியாகியும், 170 காயமடைந்தும் உள்ளனர்.
.
இந்த விபத்து Taipei நகரில் இருந்து சுமார் 70 km தூரத்தில் உள்ள Xinma என்ற ரயில் நிலையத்து அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான ரயிலில் 366 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.
.
மேற்படி ரயில் 6 வருடங்களுக்கு முன்னரே சேவையில் இணைந்ததாகவும், விபத்து இடம்பெற்ற நேரத்தில் காலநிலை நன்றாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
.
விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விபத்து இடம்பெற்ற இடம் ஒரு வளைவான பாதையை கொண்டது.

.