தாய்வானில் விமான விபத்து

TransAsia

தாய்வானின் (Taiwan) தலைநகர் தாய்பேயில் (Taipei) இருந்து சீனாவின் Xiamen நகருக்கு அண்மையில் உள்ள Kinmen தீவை நோக்கி புறப்பட்ட உல்லாசப்பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களுள் ஆறு ஒன்றில் வீழ்ந்துள்ளது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 18 பயணிகள் இதுவரை மீட்கப்படவில்லை.
.
இந்த விமானம் தாய்வான் விமான சேவை நிறுவனமான TransAsia வுக்கு சொந்தமான, பிரெஞ்சு-இத்தாலி தயாரிப்பான ஓர் ATR-72 விமானமாகும். இது விபத்தின் பொது மொத்தம் 58 பயணிகளை கொண்டிருந்தது.
.
விபத்துக்கு சற்று முன், விமானமோட்டி “mayday.. mayday… engine flame out” என்று அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
.

கடந்த ஜூலையில் இன்றுமோர் TransAsia விமான விபத்தில் 48 பயணிகள் கொல்லப்பட்டு இருந்தனர்.