திடமான முடிவின்றி பிரித்தானியா, மேயும் பதவி விலகலாம்

UK_EU

ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இருந்து விலக பிரித்தானியா எடுத்துக்கொண்ட திடமில்லாத முடிவால் பிரித்தானியாவின் அரசியல் குழம்பி உள்ளது. ஐரோப்பாவில் இருந்து வெளியேறும் முடிவு தொடர்பான அடுத்த வாக்கெடுப்பில் பிரதமர் மே இணக்கப்பாடு ஒன்றை முன்வைக்க முடியாவிட்டால், தான் பதவியில் இருந்து விலக உள்ளதாக தற்போது கூறியுள்ளார்.
.
Brexit தொடர்பாக இன்னோர் வாக்கெடுப்பு பிரித்தானிய பாராளுமன்றில் ஜூன் மாதம் முதல் கிழமை இடம்பெறவுள்ளது. இதுவே மேயின் இறுதி முயற்சியாகும். ஏற்கனவே 3 தடவைகள் மேயின் திட்டங்கள் போதிய ஆதரவு இன்றி பாராளுமன்றில் தோல்வி அடைந்துள்ளன.
.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துள் தொடர்ந்து இணைந்து இருக்கவும், வெளியேறவும் நிகரான ஆதரவுகளை கொண்டிருப்பதால் எவர் ஆட்சிக்கு வந்தாலும் திடமான தீர்வு ஒன்றை எடுப்பது கடினமாக இருக்கும்.
.
மேயின் Conservative கட்சிக்குள் உட்கட்சி வாக்கெடுப்பு வந்தால் தானும் போட்டியிடவுள்ளதாக Boris Johnson கூறியுள்ளார்.
.
மேற்படி இழுபறியால் பல சர்வதேச நிறுவனங்கள் பிரித்தானியாவில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளன. Honda தனது Swindon தொழிசாலையை 20216ஆம் ஆண்டில் மூடவுள்ளதாக கூறியுள்ளது. அப்போது 3,500 பேர் தமது வேலைவாய்ப்பை இழப்பர். Airbus தனது விமானங்களுக்கு இறக்கைகள் செய்யும் தொழிசாலைகளை Weals மற்றும் South West England பகுதிகளில் கொண்டுள்ளது. இங்கு சுமார் 110,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். Airbus இந்த இடங்களில் மேலதிக முதலீடு எதுவும் செய்யப்படமாட்டாது என்று கூறியுள்ளது. வங்கிகள் பலவும் வெளியேறும் முயற்சியில் உள்ளன.

.