துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம்

SriLankaSouth

தென்னிலங்கை துறைமுக விவகாரத்தில் பொறுத்திருக்க சீனா தீர்மானம் செய்துள்ளது. அத்துடன் தென்னிலங்கையில் செய்யவிருந்த $1.1 பில்லியன் முதலீட்டு வேலைகளையும் சீனா பின்தள்ளி உள்ளது.
.
ஆரம்ப கால உடன்படிக்கைகளின்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 80% உரிமையை 99 வருடங்களுக்கு சீனா கொள்ளவிருந்தது. இந்த விடயம் கடந்த ஜனவரி 7 ஆம் திகதியளவில் முற்றாகி இருந்திருத்தல் வேண்டும். ஆனால் அவ்விவகாரம் இப்போதும் இழுபறியில் உள்ளது. துறைமுகத்துக்கு அப்பால், 15,000 ஏக்கர் நிலத்தில் சீனா வர்த்தக வலயம் ஒன்றும் அமைக்க விரும்பி இருந்தது. இந்த வர்த்தக வலயத்தில் இந்தியா உட்பட வேறு நாடுகளும் செயல்பட சீனா அழைத்து இருந்தது.
.
மேற்படி இரு விடயங்களும் தற்போது அரசியல் போராட்டங்கள் உள்ளும், சட்ட இடர்பாடுகள் உள்ளும் சிக்கி உள்ளது. இந்நிலையிலேயே சீனா பொறுத்திருந்து செயல்பட தீர்மானித்து உள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர் Yi Xianliang துறைமுகமும் வர்த்தக வலையமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்றுள்ளார். தனது கூற்றில் “If we just have the port and no industrial zone, what is the use of the port?” கேட்டுள்ளார்.
.
வரும் மே மாதம் ரணில் சீனாவுக்கு பயணம் செய்யவிருப்பதால், அப்போது இரு திட்டங்களையும் முற்றாக்க சீனா விரும்பி உள்ளது.
.
போராட்டங்கள் நடாத்தும் சங்கங்கள் சீனாவின் உரிமையை 65% ஆகவும், கால எல்லையை 50 வருடங்கள் ஆகவும் குறைக்க விரும்புகின்றன.

.