தூரகிழக்கில் ரஷ்யாவின் திடீர் யுத்தப்பயிற்சி

ரஷ்சிய இராணுவத்தின் தயார் நிலையை உறுதிப்படுத்தும் பொருட்டு ரஷ்யாவின் சனாதிபதி Vladimir Putin ஆடி மாதம் 12ஆம் திகதி திடீர் யுத்த பயிற்சி ஒன்றை அறிவித்திருந்தார். அந்த அறிவிப்புக்கு அமைய சுமார் 160,000 படையினர் ஒரு யுத்த ஒத்திகையை 15அம்ம திகதி செய்திருந்தனர். 1991 ஆம் ஆண்டு சோவியத் உடைவின் பின் ரஷ்யா தூரகிழக்கில் நடாத்திய மிகப்பெரிய யுத்த ஒத்திகை இதுவே.

இந்த ஒத்திகையில் 1,000 tanks, 130 யுத்த விமானங்கள், 70 கடல்படை கப்பல்கள் என்பன பங்குகொண்டிருந்தன.

இதேவேளை சீன-ரஷ்ய கூட்டு கடல்படை யுத்த பயிற்சிகளும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெற்றுக்கொண்டு உள்ளது. Joint Sea 2013 என்று அழைக்கப்படும் இந்த யுத்த பயிற்சி 3 நாட்களுக்கு நடைபெறும்.