தென்கொரியாவை அழைக்கிறது வடகொரியா

KimYoJong

தென்கொரியாவின் ஜனாதிபதி Moon Jae-in னை வடகொரியாவுக்கு வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் வடகொரியாவின் விசேட ஒலிம்பிக் உறுப்பினர்கள், தென்கொரிய ஜனாதிபதியுடன் சனிக்கிழமை கொண்டிருந்த மத்திய உணவு ஒன்றின் பின்னரேயே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது.
.
மேற்கூறிய சந்திப்பின் போது Kim Yo Jong, வடகொரியாவின் தலைவரின் இளைய சகோதரி, வடகொரிய தலைவர் எழுதிய கடிதம் ஒன்றை தென்கொரிய ஜனாதிபதியிடம் (Moon) வழங்கியதாக கூறப்படுகிறது.
.
அத்துடன் Kim Yo Jong தென்கொரிய ஜனாதிபதி மாளிகையில் உள்ள visitor’s புத்தகத்தில் “expects Pyongyang and Seoul to grow closer in the hearts of the Korean people, and reunification along with prosperous future to come soon” என்று எழுதி, ஒப்பமும் இட்டுள்ளார்.
.
இதற்கு முன் 2007 ஆண்டில் தென்கொரிய தலைவர் வடகொரிய தலைவரை நேரடியாக சந்தித்து இருந்தார்.
.

ஒரு பலம் கொண்ட பின்னணியின் ஆதரவு இல்லாமல் தென்கொரியா வடகொரியாவுடன் நேரடியாக பேச முனைவதற்கான சாத்தியம் மிக குறைவு. இந்நிலையில் தென்கொரியாவுக்கு ஆதரவை வழங்கும் பின்னை பலம் சீனாவா அல்லது ரஷ்யாவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
.