தென்கொரிய ஜனாதிபதிக்கு தற்போது 14% ஆதரவு

ParkGeunHye

தென்கொரியாவின் முதல் பெண் ஜனாதிபதியான Park Geun-hye க்கு எதிராக தென்கொரியாவின் Seoul நகரில் சனிக்கிழமை இடம்பெற்ற எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் சுமார் 20,000 மக்கள் கலந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜனாதிபதி Park Geun-hye, தனது நண்பியான Choi Soon-sil என்பவருக்கு அரச இரகசியங்கள் அடங்கிய அறிக்கைகளை சட்டத்துக்கு முரணாக வழங்கி உள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
2012 ஆம் ஆண்டில் இவர் 51.6% வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவி செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இவருக்கு இப்போது 14% ஆதரவு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
.
சனிக்கிழமை அரச அதிகாரிகள் ஜனாதிபதியின் செயலாளர் அலுவலகம், நிர்வாகியின் அலுவலகம் என்பவற்றை முற்றுகையிட்டு தேடுதல் செய்துள்ளனர்.
.

ஜனாதிபதியின் நண்பியான Choi Soon-sil குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க ஐரோப்பாவில் இருந்து இன்று ஞாயிறு நாடு திரும்பி உள்ளார். இவரும், ஜனாதிபதியும் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக அறிமுகமானவர்கள்.
.