தென்கொரிய முகாம்கள் 15ஐ கைவிடும் அமெரிக்கா

NorthKoreaTest

தனது கட்டுப்பாடில் இருந்துவந்த 15 முகாம்களை அமெரிக்க படைகள் வேகமாக கைவிட்டு, தென்கொரிய அரசிடம் கையளித்துள்ளது. மொத்தம் 26 முகாம்களில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறும் என்றும் கூறப்படுகிறது.
.
1953 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் முழு அளவிலான இராணுவ கடுப்பாட்டை கொண்டிருந்தன. அங்கு தற்போது சுமார் 28,500 அமெரிக்க படைகள் நிலைகொண்டு உள்ளன.
.
வளர்ந்து வரும் சீனா பெருமளவு அமெரிக்க படைகள் அருகில் நிலைகொண்டிருப்பதை விரும்பவில்லை. சீனாவின் வெறுப்பை தணிக்க, தென்கொரியாவும் அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைக்க விரும்புகிறது.
.
கடந்த புதன்கிழமை US Forces Korea (USFK) வெளியிட்ட அறிக்கையிலேயே 15 முகாம்களில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது கூறப்பட்டுள்ளது.
.