தென் சூடான் மீது ஆயுத தடை, கேட்பது அமெரிக்கா

SouthSudan

உலகின் மிகவும் இளைய நாடான தென் சூடான் மீது ஐ. நா. ஆயுத தடை நடைமுறை செய்யவேண்டும் என்று அமெரிக்கா இன்று வியாழன் கூறியுள்ளது. அமெரிக்காவுக்கான ஐ. நா. தூதுவர் சமந்தா பவர் (Samantha Power) என்பவரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
.
இங்கே வியப்புக்குரிய விடயம் என்னவென்றால் தென் சூடானை முன்னைய சூடானில் இருந்து பிரித்து ஒரு நாடாக்க முன்னின்று செயல்பட்டது அமெரிக்காவே.
.
2011 ஆம் ஆண்டுவரை தற்போதைய சூடானும், தற்போதைய தென் சூடானும் ஒரே நாடே. சூடான் என்று அழைக்கப்பட்டிருந்த அந்நாட்டின் வடக்கே பெரும்பான்மையானோர் அரபுக்கள். அவர்களே அரசியல் பதவிகளில் முக்கிய பதவிகளில் இருந்திருந்தனர். தெற்கே வாழ்ந்தவர்கள் கருப்பு இன கிறீஸ்தவர்கள். இவர்கள் இடையே தோன்றிய முறுகல் நிலையை பயன்படுத்தி, சூடான் அரபுக்கள் மீதான வெறுப்பு கொண்டிருந்த மேற்கு அந்த நாட்டை, ஐ. நா. உதவியுடன், இரண்டாக பிரித்தது.
.
அமெரிக்காவின் பிரபல நடிகர் ஹொலிவூட் George Clooney தனது சொந்த பணத்தில் செய்மதிகளை அமர்த்தி, Omar al-Bashir தலைமையிலான அரபுக்கள் செய்த அட்டூழியங்களை படம் பிடித்து சர்வதேச குற்ற நீதிமன்றுக்கு உதவி செய்திருந்தார். அப்போது வட சூடான் அரசு தென் சூடான் மக்களை சித்திரவதை செய்வதாக கூறப்பட்டு இருந்தது.
.
ஆனால் தென் சூடான் உருவாக்கிய போது பதவிக்கு வந்த Dinka இனத்தை சார்ந்த அந்த நாட்டின் ஜனாதிபதி Salva Kirr க்கும், Nuer இனத்தை சார்ந்த அவரின் உதவியாளர் Riek Machar க்கும் இடையில் அதிகார போட்டி மூண்டது. இரு தரப்படும் மறு தரப்பை கொன்று, கொள்ளையடித்து, அவர்களின் வீடுகளை விட்டு விரட்டி வந்தனர். உலக நாடுகள் இவர்களுடையே சமாதானம் ஏற்படுத்த முனைந்திருந்தும் எந்த பலனும் இல்லை.
.
இந்நிலையிலேயே ஆயுத தடையை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
.