தேர்தல் வெற்றிக்கு தூதுவராகம் ஜெருசலேத்துக்கு

Australia

அமெரிக்கா தனது இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்தியது போல, தானும் அஸ்ரேலியாவின் இஸ்ரேலுக்கான தூதுவரகத்தை ஜெருசலேத்துக்கு நகர்த்த எண்ணத்தில் கொண்டுள்ளதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார் அஸ்ரேலியாவின் பிரதமர் Scoot Morrison.
.
இந்த திடீர் நாடகத்துக்கு காரணம் முன்னாள் Liberal கட்சி பிரதமர் Malcolm Turnbull இதுவரை பிரதிநியாக இருந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடாத்தப்பட உள்ளதே. சிட்னி நகர் பகுதில் உள்ள Wentworth என்ற இந்த தொகுதியில் வரும் சனிக்கிழமை, 20 ஆம் திகதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
.
தற்போது மிகையாக 1 ஆசனத்தை மட்டும் கொண்டு பெரும்பான்மை ஆட்சி செய்யும் Liberal கட்சி இந்த இடைத்தேதலில் தோல்வி கொண்டால் பெரும்பான்மையை இழக்க நேரிடும். பெரும்பான்மை அதிகாரம் இல்லாவிடில், Liberal கட்சி தாம் விரும்பியவாறு சட்டங்களை இயற்ற இயலாது போகும்.
.
இடைத்தேர்தல் இடம்பெறவுள்ள Wentworth தொகுதி சுமார் 14% யுத்தர்களை கொண்டது என்றும், அவர்களின் வாக்குகளை பெறும் நோக்கம் கொண்டதே இந்த நாடகம் என்றும் கூறப்படுகிறது.
.
Liberal சார்பில் போட்டியிடும் Dave Sharma என்பவர் கனடாவில் பிறந்தவர். இவர் 2013 ஆம் ஆண்டு 2017முதல்  ஆம் ஆண்டுவரை இஸ்ரேலுக்கான அஸ்ரேலியாவின் தூதுவராகவும் பதவி வகித்தவர்.

.