தேவாலய கூரை வீழ்ந்து 160 பேர் பலி

Nigeria

நைஜீரியாவின் தென் பகுதியில் உள்ள Uyo நகரில் உள்ள Reigners Bible Church என்ற தேவாலயத்தின் கூரை வீழ்ந்ததில் 160 பலியாகி உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெரும்தொகை மக்கள் நிகழ்வு ஒன்றுக்காக கூடியிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
.

சனிக்கிழமை நிகழ்வுக்காக மேற்படி மண்டபம், முறைமைக்கு முரணாக, வேகப்படுத்தி முடிக்கப்பட்டதே காரணமாக இருக்கலாம் எந்றம் கூறப்படுகிறது. கட்டுமான விதிகள் மீறப்பட்டு இருந்தால், உரியவர்கள் தண்டிக்கப்படுவர் என்று அரசு கூறியுள்ளது. தரம் குறைந்த பொருட்களை கட்டுமானத்தில் பயன்படுத்துவதும், கட்டுமான விதிகளை மீறுவதும் இப்பகுதிகளில் சாதாரணம்.
.
நைஜீரியாவில் 2014 ஆம் ஆண்டிலும் இவாறான ஒரு தேவாலய விபத்துக்கு 116 பேர் பலியாகி இருந்தனர். இவ்விடயத்தில் இரு பொறியிலாளர், தேவாலய அமைப்பாளர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு இருந்திருந்தாலும், சட்ட இழுபறிகள் காரணமாக இதுவரை எவரும் தண்டிக்கப்படவில்லை.
.