தொலைபேசி மூலம் இயங்கும் அமெரிக்க உயர் நீதிமன்றம்

SupremeCourt

கரோனா காரணமாக இன்று திங்கள் அமெரிக்காவின் உயர் நீதிமன்றம் (Supreme Court) முதல் தடவையாக தொலைபேசி மூலம் (teleconference) இயங்குகிறது. வழமையாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் எல்லோரும் நீதிமன்றம் சென்று, அங்கேயே வழக்கை விவாதிப்பார். ஆனால் கரோனா காரணமாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் அனைவரும் தொலைபேசி மூலம் இணைந்து வழக்கை இன்று விவாதிக்கின்றனர்.
.
தொலைபேசி மூலம் வழக்கு ஒன்றை விசாரணை செய்வது அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் 231 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் தடவை.
.
அனைவரும் நீதிமன்றத்தில் கூடி வழக்கை விசாரிக்கும் காலத்தில் கடைப்பிடிக்கப்படும் சில முறைமைகள் இன்றைய teleconference மூலமான வாதத்தில் இடம்பெறா. உதாரணமாக வழக்கின் ஆரம்பத்தில் அனைவரும் எழுத்து நின்று மரியாதை செய்வர். ஆனால் தமது வீடுகளில் இருந்து இணையும் பங்காளிகள் எழாது இருந்தால் அதை நீதிமன்றம் காண முடியாது. அதனால் புதிய முறைமைகள் நடைமுறை செய்யப்பட்டு உள்ளன.
.
அத்துடன் இன்றைய உயர் நீதிமன்ற விவாதமே முதல் முறையாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. தொலைபேசி மூலம் விவாதத்தை செய்ய, ஒவொருவரின் உரையாடலும் மறவர்களுக்கு ஒலிபரப்படல் தவிர்க்கப்பட முடியாத தேவை. அதனாலேயே விவாதத்தை எல்லோருக்கும் ஒலிபரப்ப நீதிமன்றம் தீர்மானித்து உள்ளது.
.
இன்றைய வழக்கு booking.com தொடர்பானது. Booking.com என்ற உல்லாச பயண நிறுவனம் “booking.com” என்பதை trademark செய்ய முனைகிறது. Booking என்பது ஒரு பொது சொல் என்பதால் அந்த வேண்டுகோளை மறுக்கிறது அமெரிக்காவின் trademark அலுவலகம்.
.