நகைப்புக்கிடமான ரம்பின் திடீர் தேவாலய பயணம்

Trump2

கைவிலங்குடன் கட்டுபாட்டில் இருந்த George Floyd என்ற கருப்பு இனத்தவரை அமெரிக்காவில் வெள்ளை இன போலீஸ் ஒருவர் முழங்காலால் கழுத்தில் நெறித்து கொலை செய்ததன் பின் அமெரிக்காவின் பல்வேறு நகரங்ககளில் கடந்த பல தினங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அவற்றுள் பல கடை உடைப்பு, போலீஸ் வாகன தீ வைப்பு போன்ற வன்முறைகளில் முடிகின்றன.
.
வன்முறைகளால் விசனம் கொண்ட சனாதிபதி ரம்ப் திங்கள் பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கூட்டி, மாநிலங்கள் தமது National Guard படைகளை பயன்படுத்தி வன்முறைகளை கடுப்பாட்டுள் கொண்டுவர தவறின் தான் இராணுவத்தை அனுப்ப உள்ளதாக கூறி இருந்தார்.
.
தனது உரை முழுவதும் வன்முறையை சாடிய பின் ரம்ப் வெள்ளைமாளிகைக்கு அண்மையில் உள்ள, கிறீஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்றிருந்தார். இவரின் இந்த திடீர் பயணம் தற்போது அவரை பலரும் நகைக்க வைத்துள்ளது. 1816 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தேவாலயம் சில தினங்களின் முன் தாக்குதலுக்கு உள்ளாகியது.
.
தேவாலயம் சென்ற இவர் வழிபாடு எதிலும் ஈடுபட்டு இருக்கவில்லை. பதிலாக இவர் தனது கையில் ஒரு பைபிள் புத்தகத்தை வைத்துக்கொண்டு படம் ஒன்று எடுத்து இருந்தார். அதனால் அவர் தேவாலயம் சென்ற நோக்கம் என்ன என்று கேட்கப்படுகிறது.
.
அத்துடன் அவரின் திடீர் பயணத்துக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் நோக்கில் படைகள் வழியில் நின்றோரை தாக்கி விரட்டி உள்ளது. அங்கு நேரடி ஒளிபரப்பு ஒன்றை செய்துகொண்டிருந்த அஸ்ரேலிய செய்தி சேவையான 7NEWS நிருபர் Amelia Brace, ஒளிப்பதிவாளர் Tim Myers ஆகியோரும் நேரடி ஒளிபரப்பில் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
.
கிறீஸ்தவர் வாக்குகளை கவர ரம்ப் தான் அறியா கிறீஸ்தவத்தை பயன்படுத்துவதும் உண்டு. 2016 ஆம் ஆண்டில் அவர் தனது கிறிஸ்தவர் முன்னிலையிலான உரை ஒன்றில் “Second Corinthians” என்பதை “Two Corinthians” என்று கூறியிருந்தார்.
.