நாடில்லா நாலு மில்லியன் அசாம் வாசிகள்

Assam

இந்தியாவின் கிழக்கு பகுதியான அசாம் (Assam) மாநிலத்தில் சுமார் 4 மில்லியன் வாசிகள் இந்திய குடியுரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
.
கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்காளதேசம்) மேற்கு பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ந்துபோது பெருமளவு கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அசாம் மாநிலத்துக்கு நகர்ந்து இருந்தனர். அவர்களில் பலர் அசாம் மாநிலத்து NRC (National Register of Citizen) பதிவில் இடம்பெறவில்லை.
.
தற்போது அசாமில் சுமார் 32.9 மில்லியன் மக்கள் உள்ளதாகவும், அதில் சுமார் 32.9 மில்லியன் மக்கள் மட்டுமே NRC பதிவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் மிஞ்சியுள்ள 4 மில்லியன் நீண்டகால அசாம் வாசிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேவிக்குறியாகி உள்ளது.
.
அவ்வப்போது அசாமில் இடம்பெயர்த்தோருக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறுவதுண்டு. 1983 ஆம் ஆண்டில் Nellie என்ற கிராமத்தில் 1,800 இஸ்லாமியர் கொலை செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. பா.ஜ. கட்சியின் மோதி, தேர்தல் காலத்தில் தான் அசாமில் உள்ள இந்தியர் அல்லாதோரை வெளியேற்றுவேன் என்று கூறியிருந்தார்.
.
இவ்வாறு இந்திய குடியிருமை இன்றி உள்ளோரில் இஸ்லாமியர் மட்டுமன்றி, சிறிது இந்துக்களும் அடங்குவர்.
.
அசாமில் உள்ளோர் இந்திய குடியுரிமையை சட்டப்படி அடையவதற்கான இறுதி நாளாக 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இருந்திருந்தது.
.
குடியுரிமை பதிவில் இல்லாதோர் தற்போது பயம் அடைந்துள்ள நிலையில், மாநில அரசு அவர்களை பயம் அடைய தேவையில்லை அன்று கூறியுள்ளது.
.

1951 ஆம் ஆண்டுக்கு பின் தற்போதே அசாமில் சட்டப்படியான NRC பதிவு இடம்பெறுகிறது.
.