நாய் போல் இழுத்து எடுக்கப்பட்ட United விமான பயணி

UA3411

இன்று திங்கள் அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரின் பிரதான விமான நிலையமான O’Hare விமான நிலையத்தில் United Airlines பயணி ஒருவர் நாய் போல் விமானத்தில் இருந்து இழுத்து எடுக்கப்பட்டு உள்ளார். இங்கு மிக முக்கிய விடயம் என்னவென்றால், பயணியை வெளியேற்ற வேண்டிய தேவைக்கு அந்த பயணி காரணம் அல்ல.
.
சிக்காகோவில் இருந்து Louisville என்ற இடத்துக்கு United Airlines flight 3411 பறக்க இருந்தது. அந்த விமானத்தில் கொள்ளக்கூடிய பயணிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக ஆசனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்ததால் சிலரை வேறு விமானம் எடுக்க கேட்கப்பட்டது. போதிய அளவு பயணிகள் வேறு விமானம் எடுக்க முன்வராத படியால் எழுமானமாக எடுக்கப்பட்ட மேற்படி பயணி விமானத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார். அப்போதே இவர் விமான சேவையால் இழுத்து வெளியேற்றப்பட்டார். உண்மையில் இந்த விடயம் பயணிகள் விமானத்துள் ஏற முன், Gateஇல் வைத்து செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
.
விமான சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான சேவைகள் விமானத்தில் உள்ள ஆசன தொகைக்கும் அதிகமாக ஆசனங்களை விற்பனை செய்வதுண்டு (over booking). இதனால் ஆசங்களை கொள்வனவு செய்த சிலர் விமானத்தை தவறும்போது அந்த ஆசனங்களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். ஆசனங்களை கொள்வனவு செய்தோர் அனைவரும் வரின், சிலருக்கு, அவர்களின் விருப்பத்துடன், மேலதிக சலுகைகள் செய்து வேறு விமானத்தில் அனுப்புவது உண்டு.
.
Over booking காரணமாக கடந்த வருடம் 434,000 பயணிகள் அமெரிக்காவின் 12 விமானசேவைகளால் வேறு விமானத்தில் பறக்க வைக்கப்பட்டு உள்ளனர். அதில் 63,000 United Airlines பயணிகளும் அடங்குவர்.
.