நுரையீரல் புற்றுநோயை தடுக்குமாம் உள்ளி

garlic

வாரம் இருமுறை பச்சையாக உள்ளி (வெள்ளைப்பூடு, garlic) உட்கொண்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய்வாய்ப்படுவதை 44% ஆல் குறைக்கலாம் என்று சீன ஆய்வு ஒன்று கணித்துள்ளது. சீனாவின் Jiangsu மாநிலத்தில் உள்ள Cancer Prevention Research என்ற அமைப்பே இந்த ஆய்வை தெரிவித்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நடைபெற்றிருந்த இந்த ஆய்வு சுமார் 4,500 சுகதேக நபர்களிடம் இருந்தும் 1,424 நுரையீரல் நோயாளிகளிடம் இருந்தும் தரவுகளை பெற்றிருந்தது.

உள்ளியை கடிக்கும்போது அல்லது துண்டாடும் போது அதில் இருந்து வெளிவரும் ‘allicin’ என்ற பதார்த்தமே இந்த நன்மையை செய்வதாக விஞ்ஞானம் கருதுகிறது. இது ஒரு ‘antioxidant’ ஆக செயல்படுகிறது.

100 கிராம் பச்சை உள்ளியில் 6.36 g புரதம், 401 mg potassium, 181 mg calcium, 153 mg phosphorus, 31.2 mg vitamin C, 25 mg magnesium, 1.7 mg iron, 1.235 mg thiamine, 0.11 mg riboflavin என்றெல்லாம் உண்டு.

சமைத்த உள்ளி பற்றி இந்த ஆய்வு எதையும் தெரிவித்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வேறு ஆய்வுகள் அளவுக்கு அதிகம் உள்ளியை உட்கொள்வதும் நன்றன்று என்றுள்ளது. அதாவது தினமும் 2 துண்டுக்கும் அதிகமாக உள்ளியை உண்பது நல்லதல்ல.

இன்று உள்ளியை உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகள்: சீனா, இந்தியா, தென்கொரியா, எகிப்து, ரஷ்யா, பர்மா.