நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

Kankara என்ற நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள ஆண் பாடசாலை ஒன்றை ஆயுததாரர் முற்றுகை இட்டப்பின் பல நூறு மாணவர்களை காணவில்லை. பாடசாலை மீதான தாக்குதல் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்று உள்ளது.

Government Science Secondary School என்ற ஆண்களுக்கான அரச பாடசாலையே இந்த தாக்குதலுக்கு உள்ளாகியது. தாக்குதல் சுமார் 1 மணிநேரம் இடம்பெற்று என்று கூறப்படுகிறது.

அப்பாடசாலையில் சுமார் 800 மாணவர்கள் தங்கி இருந்து படித்து வந்துள்ளனர். தாக்குதலின் பின் சுமார் 200 மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என்கிறது நைஜீரிய அரசு. ஏனையோரை தேடும் முயற்சியில் அரச படையினர் இறங்கி உள்ளனர்.

சில மாணவர் சுயமாகவே மதில்கள் தாண்டி ஓடி தப்பி உள்ளனர்.

சனிக்கிழமை தாக்குதல்தாரரின் மறைவிடம் என்று கருதப்படும் ஒரு இடத்தை அரச படைகள் தாக்கி உள்ளன.

2014 ஆம் ஆண்டு Boko Haram (Western education is forbidden) என்ற ஆயுத குழு நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள Chibok நகரத்து பாடசாலை ஒன்றில் இருந்து 270 மாணவிகளை கடத்தி இருந்தது.