பகிரங்கத்துக்கு வந்தார் வடகொரிய தலைவர் கிம்

Kim_Yo_Jong

வடகொரியாவின் தலைவர் 20 தினங்களின் பின் பகிரங்கத்துக்கு வந்துள்ளார்.
.
வடகொரியாவின் அரச செய்தி சேவையான Korean Central News Agency (KCNA) நேற்றைய தினம் கிம் புதிதாக கட்டப்பட்டபசளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தன. ஆனாலும் வடகொரியாவுக்கு வெளியே அந்த படங்கள் உறுதி செய்யப்படவில்லை.
.
இன்று KCNA நேற்றைய படங்களை உறுதி செய்யக்கூடிய, அவற்றுடன் தொடர்புடைய வீடியோக்களையம் வெளியிட்டு உள்ளது. அதனால் வடகொரியாவின் தலைவர் நலமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
.
நேற்றுவரை அவர் மரணித்திருக்கலாம் அல்லது கடுமையாக உடல்நலம் பாதிப்படைந்து இருக்கலாம் என்றே மேற்கு நாடுகள் கருதி உள்ளன.
.