பங்குச்சந்தை DOW Jones 831 புள்ளிகளால் வீழ்ச்சி

Dow

அமெரிக்காவின் Dow Johns (30 blue-chip stocks) பங்கு சுட்டி இன்று புதன்கிழமை 831 புள்ளிகளால், அல்லது 3.15% ஆல், வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற இரண்டாவது பெரிய வீழ்ச்சி இதுவாகும். கடந்த பெப்ருவரி 5 ஆம் திகதி DOW 1,100 புள்ளிகளால் வீழ்ந்திருந்தது.
.
இன்று கூடவே S&P 500 பங்கு சுட்டியும் 3.3% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. தொழிநுட்ப நிறுவனங்களின் பங்குகளை பெருமளவில் கையாளும் NASDAQ பங்குச்சந்தையும் 4% க்கு மேலால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
.
Amazon பங்கு 6.2% ஆல் வீழ்ந்துள்ளது, Apple பங்கு 4.6% ஆல் வீழ்ந்துள்ளது, Google/Alphabet பங்கு 4.6% ஆல் வீழ்ந்துள்ளது. Amazon நிறுவனத்தை ஆரம்பித்த Jeff Bezos மட்டும் இன்று $9.1 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளார். Facebook ஆரம்பிப்பாளர் Mark Zuckerberg $2.4 பில்லியன் பெறுமதியை இழந்துள்ளார்.
.
பங்குச்சந்தைகள் இவ்வாறு திடீர் ஏற்றங்களுக்கும், இறக்கங்களுக்கும் உள்ளாவதை பாண்டித்தியம் பெற்றவர்களே விளக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆனாலும் சில காரணிகள் இன்றைய வீழ்ச்சியை ஆதரிக்கின்றன.
.
சீனாவுடனான அமெரிக்காவின் பொருளாதார யுத்தம் எவ்வகையில் முடியும் என்று தெரியாது முதலீட்டாளர் தவிக்கின்றனர். சீனா ரம்பின் அழுத்தங்களுக்கு அடிபணியாவிடின், ஒரு நீண்ட கால வர்த்தக யுத்தம் தொடரலாம் என்று நம்பப்படுகிறது.
.
அத்துடன் வேகமாக அதிகரித்து வரும் வட்டி வீதமும் முதலீடுகள் மீதான ஆர்வத்தை குறைத்து வருகிறது. ஆபத்து (risk) குறைந்த வட்டி வருமானம் கணிசமாக இருக்கையில், ஆபத்துகள் கொண்ட முதலீட்டு வருமானம் ஆர்வத்தை குறைப்பது வளமை.
.