பர்மாவின் இஸ்லாமிய காழ்ப்பு பிக்கு Wirathu சரண்

பர்மாவின் இஸ்லாமிய காழ்ப்பு பிக்கு Wirathu சரண்

பர்மாவில் ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிராக வன்முறைகளை ஊக்குவித்த பிக்குவான Ashin Wirathu இன்று திங்கள்கிழமை பர்மா போலீசிடம் சரண் அடைந்துள்ளார். கடந்த 18 மாதங்களாக ஒளிந்து வாழ்ந்த இவர் திடீரென திங்கள் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

இந்த பிக்கு தொடர்பாக Time சஞ்சிகை 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிப்பு ஒன்றில் இவரை “Buddhist Bin Laden” என்று சித்தரித்திருந்தது. இந்த பிக்கு ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்து நடவடிக்கைகள் எடுத்திருந்தவர்.

ஆனாலும் இவரின் ரோஹிங்கியா தொடர்பான விசயங்களுக்கு அல்லாமல், இவர் அங் சான் சுகிக்கு (Aung San Suu Kyi, NLD கட்சி) எதிராக செயல்பட்டதாலேயே போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இவரின் சரண் அடைவுக்கான காரணமும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி பர்மாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் அங் சான் சுகிக்கு எதிர்ப்பு அலையை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு இலங்கை வந்திருந்த Wirathu தனது 969 இயக்கம் சார்பில் இலங்கையின் பொது பல சேன பிக்குவான ஞானசாரவுடன் இணைந்து உடன்படிக்கை ஒன்றில் கையொப்பம் இட்டு இருந்தார்.

2017 ஆம் ஆண்டு பர்மா பிக்குகளின் உயர்பீடம் Wirathu வை ஒரு வருடம் காலம் பௌத்த மத வேலைப்பாடுகளில் இருந்து தடை செய்திருந்தது. தடை காலம் முடிந்த பின்ன அவர் மீண்டும் வன்முறை பேச்சுக்களை ஆரம்பித்து இருந்தார்.