பலஸ்தீனர் வீடுகளை அழிக்கும் இஸ்ரேல் நீதிமன்றம்

UN_Israel_Palestinian

Bedouin என்ற பகுதியில் உள்ள பலஸ்தீனர் குடியிருப்புகளை அழிக்க இஸ்ரேல் உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை உரிமை வழங்கியுள்ளது. ஜெருசலேத்துக்கு கிழக்கே உள்ள இந்த குடியிருப்பில் உள்ள சுமார் 180 பலஸ்தீனர் பலவந்தமாக வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட உள்ளனர்.
.
அங்கு குடியிருந்த பலஸ்தீனார் வீடுகள் தரமாக கடப்பட்ட வீடுகள் ஆல்ல என்று இஸ்ரேல் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் நீண்ட காலமாக அங்கு வாழும் பலஸ்தீனார் தாம் கல்வீடுகளை அமைக்க இஸ்ரேல் அரசு அனுமதி தரவில்லை என்று கூறியுள்ளனர்.
.
பலஸ்தினரை விரட்டிய பின் அங்கு இஸ்ரேலிகளுக்கு புதிய வீடுகள் அமைக்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலம் இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்ட நிலமாகும்.
.
வழமைபோலவே ஐ.நா. இஸ்ரேலின் நடவடிக்கை சர்வதேச விதிகளுக்கு முரணானது என்று கூறிவிட்டு, அடங்கி உள்ளது.
.