பல்லாயிரம் Microsoft email servers மீது தாக்குதல்

பல்லாயிரம் Microsoft email servers மீது தாக்குதல்

Microsoft நிறுவனத்தின் Exchange என்ற email server களை கொண்ட குறைந்தது 60,000 நிறுவனங்களின் மீது hackers தாக்கி, தரவுகளை களவாடி உள்ளதாக Microsoft நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 30,000 நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி வழங்க உள்ளதாக வெள்ளைமாளிகை கூறியுள்ளது.

இந்த தாக்குதலை சீனாவின் ஆதரவு கொண்ட hackers குழுவே செய்ததாக தாம் நம்புவதாக Microsoft கூறியுள்ளது. Exchange server softwareரில் இருந்த பலவீனத்தை (bug) அறிந்த hackers மிகவும் புத்திசாலித்தனமாக தமது ஊடுருவும் software (malware) களை இறக்கி தரவுகளை திருடி உள்ளனர்.

உலகம் எங்கும் அரச அலுவலகங்கள், வங்கிகள், மின் இணைப்பு நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற பெரிய நிறுவனங்கள் பொதுவாக Microsoft Exchange என்ற email சேவையையே பயன்படுத்துகின்றன.

Exchange server கொண்டுள்ள இந்த பலவீனத்தை அடைக்க Microsoft தற்போது புதிய திருத்தங்களை வழங்கி வருகிறது. ஆனாலும் திருடப்பட்ட தரவுகளை மீட்க முடியாது.