பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான்?

Pakistan

பாகிஸ்தான் தேர்தல் கடந்த புதன்கிழமை இடம்பெற்று இருந்தாலும் இன்றுவரை இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுவரை சுமார் 23% வாக்குகளே எண்ணப்பட்டுள்ளன. இதுவரை இடம்பெற்ற கணக்கெடுப்புகளின்படி இம்ரான் கான் தலைமையிலான PTI கட்சி 109 ஆசனங்களையும், நாவாஸ் ஷரீபின் PML-N கட்சி 67 ஆசனங்களையும், பெனாசிர் பூட்டோவின் மகன் தலைமயிலான PPP கட்சி 41 ஆசனங்களையும் பெறுகின்றன.
.
முறைப்படி கணக்கெடுப்புகள் வெளியிடப்படாவிடினும், இம்ரான் கான் தனது வெற்றியை ஏற்கனவே கொண்டாடி உள்ளார். ஏனைய காட்சிகள் வழக்குகளை தொடர முனைகின்றன.
.
மொத்தம் 272 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றில், குறைந்தது 137 ஆசனங்களை வென்ற கட்சியே அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யலாம். ஆனால் இம்ரானின் கட்சிக்கு சுமார் 114 ஆசனங்களே கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
.
1952 ஆம் ஆண்டு லாகூர் (Lahore) நகரில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த இம்ரான் கான், Oxford பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர். நாடு திரும்பிய இம்ரான் கான் 1992 ஆம் ஆண்டு பாகிஸ்தான் Cricket World Cup வெற்றியை அடைய செய்தவர்.
.
இம்ரான் தனது 42 ஆவது வயதில், 21 வயதுடைய Jemima Goldsmith என்ற பிரித்தானிய பெண்ணை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு. இந்த விவாகம் 2004 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்திருந்தது. 2015 ஆம் ஆண்டில் இம்ரான் பாகிஸ்தான்-பிரித்தானிய பெண்ணான Reham Khanm என்பவரை திருமணம் செய்திருந்தார். அந்த திருமணமும் 10 மாதங்களில் முடிவடைந்திருந்தது. 2018 ஆம் ஆண்டு பெப்ருவரியில் இம்ரான் Bushra Manika என்பவரை திருமணம் செய்துள்ளார்.
.

1996 ஆம் ஆண்டளவில் இம்ரான் தனது PTI கட்சியை (Pakistan Tehreek-e-Insaf) ஆரம்பித்திருந்தார். அக்கட்சி 1997 ஆம் ஆண்டு ஒரு ஆசனத்தையும் வென்றிருக்கவில்லை. 2013 ஆம் ஆண்டில் இம்ரானின் கட்சி 30 ஆசனங்களை வென்றிருந்தது.
.