பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் மரணம்

Jinnah

பாகிஸ்தானை இந்தியாவில் இருந்து பிரித்து தனி நாடாக்கிய முஹம்மட் அலி ஜின்னாவின் மக்கள் Dina தனது 98 ஆவது வதில் காலமானார். தனது தந்தையார் பாகிஸ்தான் என்ற ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கி அதன் Governor General ஆக இருந்த போதும் அவரின் ஒரே பிள்ளையான மகள் Dina பாகிஸ்தானுக்கு இடம்பெயரவில்லை. Dina தொடர்ந்தும் இந்தியாவிலேயே குடியிருந்தார்.
.
ஜின்னாவின் மகள் Neville Wadia என்ற இந்திய Parsi இனத்தவரை திருமணம் செய்த காரணத்தால் ஜின்னாவின் வெறுப்புக்கு ஆளானார். இந்தியாவில் பல மில்லியன் இஸ்லாமிய பையன்கள் உள்ளபோது, உனக்காக இவனா காத்திருக்கிறான் என்றாராம் ஜின்னா. அப்படியானால் பல மில்லியன் இஸ்லாமிய பெண்கள் இந்தியாவில் இருக்கும்போது எதற்காக அம்மாவை திருமணம் செய்தீர்கள் என்று கேட்டாராம் மகள் Dina. தனது 42 ஆவது வயதில் ஜின்னா Rattanbai Petit என்ற 18 வயது Parsi பெண் ஒருவரையே திருமணம் செய்திருந்தார்.
.
ஜின்னா நோய்வாய்ப்பட்டு உள்ளபோது Dina பாகிஸ்தான் செல்ல விசா கேட்டபோது, Dina வுக்கு விசா வழங்க மறுத்த ஜின்னா, தான் மரணித்த பின் விசா வழங்கலாம் என்றாராம்.
.

1938 ஆம் ஆண்டில் ஆரம்பித்த Dina-Neville திருமணம் 1943 ஆம் ஆண்டில் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்தின் பின் இங்கிலாந்து சென்ற Dina, பின் நியூ யோர்க் சென்று வாழ்ந்தார். அங்கேயே அவர் காலமானார்.
.